ஹர்பஜன் சிங்கின் பேக் திருடப்பட்டது
நேற்று முன்தினம், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது நண்பருடன் டில்லி வந்தார். இவர், கர்னால் அருகில் உள்ள மதுபான் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, டீ குடிக்க சென்றார். அப்போது அங்குவந்த மர்ம கும்பல், ஹர்பஜன் காரின் கண்ணாடியை உடைத்து "பாஸ்போர்ட்', பணம், "லைசென்ஸ்', "கிரெடிட் கார்டு' உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்களுடன் கூடிய "பேக்கை' திருடிச் சென்றனர். இத்திருட்டு குறித்து, கர்னால் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், நேற்று கர்னாலில் உள்ள "செக்டர் 13' என்ற இடத்தில் "பேக்கை' கண்டுபிடித்தனர். இதில் 34 "டெபிட் கார்டு', ஐந்து "ஏ.டி.எம்., கார்டு' மற்றும் அவரது உறவினரின் ஒரு "கிரீன் கார்டு' ஆகியவை இருந்தன. ஆனால் ரூ. 9,500 பணம், "பாஸ்போர்ட்', "லைசென்ஸ்' மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இல்லை.
காணமல் போன எஞ்சிய பொருட்கள் மற்றும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க ஐந்து குழுவாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் இவர்கள் பிடிபடுவார்கள் என, கர்னால் போலீஸ் உயர் அதிகாரி ஜோகிந்தர் ராதி தெரிவித்துள்ளார்.
You may also Like
ஹர்பஜன் சிங்கின் பேக் திருடப்பட்டது
2011-12-13T23:24:00-08:00
edupudi
விளையாட்டு|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை
