மாயா...
மாயா...
கடிதத்தைக் கையில் பிடித்தபடி விம்மலை அடக்கினாலும் கண்ணீரை அடக்கமுடியாமல் உள்ளாற அழுது கொண்டிருந்தாள் மாயா..
யாராவது பார்த்துவிடுவார்களோ எனும் பயம் அவளை அழுத்தித் தாக்கிக்கொண்டிருப்பதை அவள் விழிகள் வெளிக்காட்டின.. வரும் கண்ணீரை என்னதான் அடக்கினாலும் முடியவில்லை... அப்படியே அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு... சுற்று முற்றும் பார்த்தவளாய்.. தாங்க முடியாமல் சோபாவில் தலையை சாய்த்துக்கொண்டாள்...
ஓ.. இது வேற நடக்குதா..
அவள் தலை முடியைப் பிடித்து யாரோ ஆட்டுகிறார்கள்..
திரும்பியவளுக்குப் பேரதிர்ச்சி.. கணவன் சுரேஷ்.. அனல் தெறிக்கும் அவன் பார்வையில் சுட்டெரிக்கப்பட்ட புழுவானாள் மாயா...
பயத்தால் வேர்த்து வடிந்தது..
யாரு.. யாருக்கிட்டயிருந்து லெட்டர்.. தா.. என்று அதட்டிப் பறித்து.. அவசர அவசரமாகப் படித்தவனின் கண்களிலும் கோபம் கொந்தழித்தது... ம்.. அப்போ அவனுக்கு எப்போவும் ஒன் நினைப்புத்தானா... ஏன்டி.. படுக்கறது என்கூட.. மனசால வாழ்றதல்லாம் அவன் கூடவா என்று அவன் துப்பிய கொடூர வார்த்தைகள் அவள் மனசை ஆழமாகத் துளைத்துத் துண்டாடிக்கொண்டிருந்தது...
வாய் பேச முடியாது திகைத்துப் போயிருந்தவள் முகத்தில் பளார்... என விழுந்த அறை அவளை திக்கு முக்காட வைத்தது.. அழுதாள்.. இன்னும் அழுதாள்.. அவள் அழ அழ அவனுக்கும் கோபம் அதிகரித்தது.. அடித்தான் .. திட்டினான்.. இன்னும் அடங்காமல் அருகில் இருந்த எதை எதையெல்லாமோ உடைத்தான்... மாயாவால் அழுவதைத் தவிர வேறு எதுவுமே செய்ய முடியவில்லை...
ஆத்திரம் அடங்கிப் போயவன் அமர்ந்து கொள்ள பல மணி நேரமானது...
சப்தங்கள் ஓய்ந்தன.. திறந்திருந்த ஜன்னல் வழியே மெல்லிய தென்றல்.. திரை விலக்கித் தானாக நுழைந்து கொண்டது.. அது அவள் முகத்திலும் தெறித்தது..
வழிந்து சென்ற கண்ணீர் காய்ந்திருந்த தடத்தில் .. மெல்லிய காற்றுப் பட்டுத் தெறித்த போது லேசான எரிவு.. ஓ.. அவன் அறைந்ததனால் .. அடித்ததனால் பதிந்திருக்கும் தடங்கள் கூட இந்தளவு எரியவில்லை... அவள் மனது மெதுவாகப் பேசிக்கொண்டது..
மதன்.. ஏன்.. ஏன் மதன்.. என்று அவள் இதயம் துடிக்க ஆரம்பித்தது..
உனக்கு மட்டும் ஏன் இப்டி.... உலகத்துல எத்தனை பேர் இருக்காங்க.. நீ மட்டும் ஏன் .. என்று அவளுக்குள் அவள் உளற ஆரம்பித்தாள்..
அன்றொரு ஞாயிறு..
ஊரே தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்க... மாயாவின் கண்கள் மாத்திரம் எதையோ தேடிக்கொண்டிருந்தன...
டேய்.. வாடா...
இரு மாயா... ரெண்டே ரெண்டு பந்திதான்.. எழுதி முடிச்சிடறன்
அதை எப்பவும் எழுதலாம்.. இங்கே வாடா எனும் அன்பும் உரிமையும் கலந்த அவள் அழைப்பை இதற்கு மேலும் நிராகரிக்க முடியாது எழுந்து சென்றான் மதன்..
ம்.. பிடி... பட்டாசு..
இதெல்லாம் எனக்கெதுக்கு..
ஏய்.. நீ என் பெஸ்ட் பிரன்டா இல்லையா..
அதுல என்ன சந்தேகம் மாயா.. என் உயிர் இருக்கும் வரைக்கும் நீ.. நீ மட்டுந்தான்...
ஓஹோ.. ஆரம்பிசுட்டாருயா.. டேய்.. எவ்ளோ காலத்துக்கு ஒரு ஆணும் பெண்ணும் நட்பா மட்டும் இருக்கிறது... நாம என்ன சின்னக் குழந்தைகளா.. இப்போ காலேஜ் போறோம்.. ஊர் இதை ஏற்றுக்கொள்ளுமா..
மாயா.. நீ ஏத்துக்கிறியா... அவன் கேள்விக்குள் இருந்த ஏக்கம் மாயாவுக்கு மட்டுமே புரியும் விடயம்...
அவனை ஆறத் தழுவிக்கொண்டாள்...
ம்.. உன்னை மாதிரி திடமான மனசு எனக்கில்லைடா.. நான் வீக்.. ஆனா... நீ நல்லாருக்கனும் மதன்.. ஒன் மனசு எல்லாருக்கும் வராது..
மாயா.. நட்பு காதலா மாறி.. அந்தக் காதல் திருமணத்துல முடிந்து.. பிள்ளை குட்டி.. குடும்பம்.. பொறுப்புனு... அவசர அவசரமா உன்னை இழக்க முடியாது.. வாழ்நாள் முழுக்க நாம நட்போட இருக்கனும்.. நம்ம வரையறை இதுதான்.. உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் .. எனக்குனு ஏதாச்சும் ஆகறப்ப நான் அதைப் பகிர்ந்துக்கற ஒரே ஆள் நீயாத்தான் இருக்கனும்.. அது போதும் மாயா... இருப்பல்ல..
ஒன் கூடவே வாழனும்னு தான் ஆசையாருக்கு.. ஆனா.. அதை விட உன் நட்போட ஆழம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குடா... நான் ஒரு பொம்பள.. எனக்குனு இருக்கிற சமுதாய வரையறைகள எப்டி தாண்டப்போறேனோ தெரியல.. ஆனா .. முடிஞ்சளவு என் மனசுல எப்பவும் .. உன் நட்புக்காக ஒரு இடம் இருக்கும்...
மாயா.. நீ சாதாரண பெண் இல்லை.. அற்புதமான மனிதப் படைப்பு.. உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியே நடக்கும்.. உயிர் இருக்கும் வரை உன் நட்போட நான் இருந்தா அதுவே போதும்....
ம்.. ஓகே ஓகே.. சாமியார் மாதிரி பேசறடா நீ... என்று அவள் விழியோரம் வடியும் கண்ணீரைத் துடைத்துவிட்டவள்.. ம்.. கொளுத்து .. என்று பட்டாசை நீட்டினாள்...
சுமார் நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள்..
மதன்.. கிளம்பு..
என்ன மாயா... எங்கே
குடும்பத்தோட குற்றாலம் போறோம்..
ஓ.. என்றான் மதன்..
என்ன ஓ... அலட்சியமா சொல்ற.. ஹா.. நீ என் குடும்பத்துல இல்லையா அப்ப...
மாயா...
டேய்.. டேய்.. சும்மா மழுப்பற வேலைல்லாம வாணா.. வறியா இல்லையா..
மாயா சொல்லறத கேளு..
என்ன சொல்லப்போற...
உங்க குடும்பம் வெறும் பிக்னிக் போகல மாயா..
அப்போ..
அப்டியே ஒரு இடத்துல உன்னை பெண் பார்க்கவும் வாறாங்களாம்..
இதென்னடா புதுக்கதை..
ஆமா மாயா.. அங்கே உங்க குடும்பத்துல வேற விஷயங்கள்லாம் நடக்கும்.. நான் எதுக்கு ..
ஒரு கணம் அமைதியானாள் மாயா...
ம்.. இப்டில்லாமா நடக்குது... ஓகே.. மதன் எனக்காக ஒரு காரியம் பண்ணு..
என்ன மாயா.. சொல்லு..
ரெண்டு நாள் கழிச்சாவது நீ அங்கே வறியா..
என்ன மாயா சின்னப்புள்ள மாதிரி...
முடியுமா முடியாதா...
அவள் அதிகாரம் பண்ணி எப்போதுமோ மதன் மறுத்ததில்லையே... ம்.. என்று தலையாட்டினான்...
சின்ன வயசுல இருந்தே ஒன்றாகப் பள்ளிக்கூடம்.. ஒரே ஊர்.. விட்டுக்கொடுப்பு.. சுயநலம் இல்லாத நட்பு என்று பழகி.. காதல் எனும் மாயையைக் கூட மிகத் தெளிவாக மறுத்தறிந்து கொண்ட இரு உள்ளங்கள் மாயாவும் மதனும்... உலக சூழ்நிலையில் இதை வெளிப்படையாகச் சொல்லிப் புரிய வைக்க முடியாத அளவு பாசம் அவர்கள் இருவருக்கிடையிலும் இருக்கிறது...
இன்னும் இரண்டு மாதங்களில் மதன் ஒரு டாக்டர்... அதற்குள் மாயா யாருக்கோ மனைவியாகிவிடுவாள்..
மாயாவின் மனசு துடி துடித்தது.. அப்படித்தான் பெண் பார்க்கும் படலம் இடம் பெற்று அவள் திருமணம் நிச்சயமானால் கூட.. தனக்கு வரப்போகும் கணவரிடம் மதனுக்கும் தனக்குமிடையிலான உறவைத் தெளிவாக எடுத்துக் கூறி.. அவன் ஆசைப்படியே அவன் உயிர்த்தோழியாக... தூரத்து உறவாக அவனுக்காக எப்போதும் இருக்க வேண்டும் என்பதே மாயாவின் ஆசையும்.. அதற்காகத்தான் இப்போது அவனையும் அழைக்கிறாள்..
மதன் சொன்னபடியே.. மாயாவுக்கே தெரியாமல் அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.. நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.. எல்லாம் நல்லபடி நடந்தது... இப்போது மாயாவின் மனம் .. மதனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது..
அவன் வந்ததும்... தன் வருங்கால கணவருக்கு அவனை அறிமுகப்படுத்த வேண்டும்.. ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது அவள் எதிர்பார்ப்பு..
ஹலோ.. மதன்.. எங்கேடா இருக்க...
மாயா... நான் இன்னும் 15 நிமிஷத்துல.. நீ தந்த அட்ரசுக்கு வந்துருவன்..
ஓகே.. ஓகே.. நேரா வீட்டுக்க வரவேணா.. இந்தத் தெரு முடியற இடத்துல சின்னதா ஒரு கார்டன் இருக்கு.. அங்கே வந்துரு.. நானும் கிளம்புறன்..
மதனைப் பார்த்து நாலு வார்த்தை பேசி விட்டு.. தனக்குக் கணவராக வரப்போகும் சுரேஷை அழைத்து அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்பினாள் மாயா...
அடுத்த இருபதாவது நிமிடத்தில்...
டேய்... நீ ரொம்பப் பெரிய ஆளு டா..
என்ன மாயா... தத்துவம்லாம் பேசற
ம்.. தத்துவந்தான்.. ஒன் மாதிரி தெளிவான மனசு எத்தனை பேருக்கு இருக்கும்னு தெரியல மதன்.. ஆனா நீ என் மனசுல எப்பவுமே உயர்ந்த இடத்துல இருக்கிற..
அடடா.. உங்கம்மா அப்பா சரியான நேரத்துல தான் ஒனக்குத் திருமண ஏற்பாடு பண்ணிருக்காங்க.. மாயா..
என்ன சொல்ற மதன்..
இல்லையா பின்ன.. பெரிய மனுசியாட்டம் பெரிய பெரிய வார்த்தைல்லாம் பேசற.. அப்புறம் என்ன.... என்று அவன் சொல்லும் போது செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே... அவனுக்கு உதைத்தாள் மாயா...
இருந்தாலும் நீ சின்னப் புள்ள தான் னு பதிலுரைத்தான் மதன்...
சிரித்துக்கொண்டவள்... மதன்.. உங்கம்மா அப்பா இருந்திருந்தா.. இந்த நேரத்துல ஒனக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணிருப்பாங்கல்ல..
நோ சான்ஸ் மாயா... இன்னும் ரெண்டு மாசம் தள்ளி.. படிப்பு முடிஞ்சிடும்... அப்புறம் போஸ்டிங்.. டிரெய்னிங்.. சட்டில்மன்ட்.. ஏராளமான விஷயம் இருக்கு ..
டேய்.. ஒன்னைக் கட்டிக்கப்போறவ ரொம்ப கொடுத்து வைச்சவளா இருப்பா.. எனக்குத்தான் அந்த வாய்ப்பில்லாம போச்சு.....
மாயா.. உங்கப்பா அம்மா எதிர்பார்க்கிற ரேஞ்சுல எனக்கொரு குடும்பம் இல்லை.. அது கூடப் பரவால... கெளரவம் அது இதுக்கெல்லாம் மேலால.. என்னைச் சுற்றி எனக்காக இருந்த எல்லாரையுமே இழந்த நான்.. எனக்காக சிரித்தும்.. என்னோட சேர்ந்து அழுதும்... எப்பவுமே சந்தோஷமா இருக்கிற என் மாயாவையும் இழப்பேனா..
மாயா.. காதல்.. கல்யாணம் இதுக்கெல்லாம் மேலால ஒரு மனுசனோட மனசுக்குத் தேவையான ஆறுதல் அவன் மனசைத் தெரிஞ்ச இன்னொரு மனசுக்கிட்டத்தான் கிடைக்கும்.. அது எத்தனை தூரத்துல இருந்தாலும் பரவால... பத்து வருஷத்துக்கொரு தடவை பேசிக்கொண்டாக் கூட.. இப்போதான் பிறந்த புது உணர்வு கிடைக்கும்.. சோ... நீ எனக்கு எப்பவுமே ஒரு பிரன்ட்... ஒரு இல்லை.. ஒரே ஒரு .... என்று அவன் சீரியசாகக் கூறிக்கொண்டிருக்கும் போதே... அவன் கையில் கொண்டு வந்திருந்த வாழ்த்து அட்டையை அவசர அவசரமாகப் பறித்துக் கொண்டு ஓடினாள் மாயா...
நில்லு மாயா.. நோ நோ.. தர மாட்டேன்னு அவள் கூற.. இவன் விரட்ட.. சுதந்திரமான இரு பட்டாம் பூச்சிகள் பறந்து திரிவதைப் போன்று.. குழந்தைகளாய் ஓடித்திரிந்தார்கள் இருவரும்...
என்ன டாக்டர் .. இப்பவே களைச்சுட்டிகளோனு... கூறிக்கொண்டே அந்த மரத்தின் அருகே சென்றவள்.. ம.........த....ன்.. என்று அலறியபோது .. ஒரு கணம் உயிரே பிரிந்தது போன்று உணர்ந்தான் மதன்..
ஓடிச்சென்றவன்...
மாயா.. இறுக்கமா பிடி... விட்ராத.. இறுக்கமா பிடிச்சுக்கோ என்று அந்த மரத்தருகில் வெட்டப்பட்டிருந்த பெருங்குழியில் .. சரியும் மண்ணை வறாண்டிப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் மாயாவைப் பார்த்துக் கலங்கிய படியே கதறினான் மதன்..
அவசர அவசரமாகத் தன் பான்டை கழற்றியவன் அதனை அவள் உடம்பைச் சுற்றி இறுக்கி... மெல்ல மெல்ல மேலிழுத்தான்... மாயாவின் பிடி தளர்ந்தது... மதன் முழுப் பலத்தையும் சேர்த்து அவளை இழுத்தெடுத்தான்... தாவி அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டாள் மாயா...
ம்.. இறுக்கமாப் பிடிச்சுக்கோ மாயா.. ஜஸ்ட்.. மேலே வந்துடலாம்..
மண்ணில் பிரண்டு.. அவளைக் காப்பாற்றி விட அல்லல் படும் அவன் நிலையையும்.. அவன் கண்களில் தெரிந்த உண்மையான பாசத்தையும் பார்த்து.. மெய் மறந்து... விம்மிக்கொண்டே.. அவனில் சாய்ந்து கொண்டாள் மாயா..
என்ன மாயா... பார்த்து ஓட வேணாமா... எவ்ளோ பெரிய குழி....
தரையில் அமர்ந்து... முழங்காலில் முகம் புதைத்து அழுதாள் மாயா...
அட.. இதுக்கெல்லாமா அழுவாங்க.. கிளம்பு மாயா... பாரு.. இப்போ வீட்ல வேற ஒன்னைத் தேடப் போறாங்க... ம்.. கிளம்பு என்று அவள் கையைப் பிடித்து இழுத்தவன்...
நொடிப் பொழுதில்.. தவறிக்.. குழியில் கால் வைத்தான்...
அவன் பிடி தளர்ந்தது.... மா.........யா............... அவன் அலறினான்..
மதன்.........அவளும் அலறினாள்...
பழைய நினைவுகள் சூழ்ந்து கொள்ள மெய் மறந்திருந்த மாயா திடீரென விழித்துக்கொண்டாள்.... வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே .. மீண்டும் மதனின் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்..
அன்பின் மாயா... நீ எப்போதும் போல நலமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
மாயா.. தனிமை.. இது ஒன்றுதான் என்னைக் கொல்கிறது என்று எனக்குள் சிறு ஏக்கம்... ஆனா ஒரு விஷயம் மாயா.. நேற்று ராத்திரி ஒரு கதை வாசித்தேன்.. என்னைப் போலவே ஒரு முடமான மனிதன்.. அவன் தனிமையையும் .. சோகங்களையும் வென்று.. எவ்வாறு சமுதாயம் போற்றும் ஒரு மனிதனாக மாறுகிறான் என்று சித்தரிக்கிறது கதை...
அற்புதமான எழுத்து மாயா.. என்னமோ எனக்குள் ஒரு புத்துணர்வு வந்தது போலிருக்கிறது.. திரும்பவும் இந்த உலகத்தை புதுக் கண்கள் கொண்டு பார்க்க வேண்டும் போலிருக்கிறது... மாயா.. வாழனும்னு ஆசை அதிகமா வருது.. என்னமோ என்னால முடிஞ்சளவுல சின்னதா இங்கே இலவச மருத்துவ சேவை செஞ்சிக்கிட்டிருக்கன்.. இன்னும் பெரிசா பண்ணனும் போலிருக்கு மாயா...
எனக்கென்ன அவ்ளோ வயசாச்சா.. இந்த உலகத்துல இன்னும் சாதிக்கனும் போலிருக்கு மாயா.. இந்தக் கடிதம் உன்னை வந்து சேரும் போது.. நான் எங்கிருக்கப் போகிறேன்னு எனக்கே தெரியல மாயா.. ஆனா.. நீ என் கூடவே இருப்ப.. உன் ஆசி.. உன் அன்பெல்லாம் எனக்கும் எப்பவுமே இருக்கும்னு ஒரு நம்பிக்கையில... இவ்ளோ காலமா முடங்கிக் கிடந்த இந்த ஊரை விட்டுக் கிளம்பறன் மாயா...
என்றாவது ஒரு நாள் நாம் சந்தித்தாலும்.. இல்லாவிட்டாலுங் கூட.. எனக்குனு இந்த உலகத்துல இருக்கிற ஒரே ஒரு நட்பு நீ.... உன் கிட்ட மட்டுந்தான் இதை சொல்லனும் போலிருந்துது.. சொல்லிட்டன்.... நீ நல்லாருக்கனும் மாயா...!
நட்புடன்..
மதன்.
தொகை தொகையாக அடுக்கிக்கிடக்கும் மதனின் பதில் வழங்காத கடிதக் கட்டுக்குள் இதனையும் சொருகி வைத்து விட எழுந்து சென்றாள் மாயா..
-நிலாமுற்றம்-

You may also Like
மாயா...
2013-01-13T08:02:00-08:00
edupudi
சிறுகதை|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை